3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண்,  இந்தியா மீண்டும் தோல்வி   -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்தது

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கடந்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து கலக்கிய ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் ஷிகர் தவான், இன்று ரன் சேர்ப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டார்.


அவருக்கு பக்க பலமாக வழக்கம் போல் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தமாக ஆடிய தவான் 91 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதேவேளையில், ஒருபுறம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி  சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 24 வது சதம் இதுவாகும்.

3 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரகானே 55 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 117  பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 117 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாஸ்டிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பிஞ்ச்(21 ரன்கள்) ஸ்மித் (41 ரன்கள்) பெய்லி (21 ரன்கள்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.


இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ஆஸ்திரேலிய அணி 29.6 வது ஓவரில் 167 ரன்களை சேர்த்து இருந்த போது மார்ஷ் 62 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால்,ஆஸ்திரேலிய அணிக்கு லேசான நெருக்கடி ஏற்பட்டது.ஆனால், மேக்ஸ்வெல் நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இந்திய அணி துல்லிய பீல்டிங்கால், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றாலும், மேக்ஸ்வேல், கடும் சவாலாக விளங்கினார்.

 சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் அணியின் வெற்றிக்கு 1 ரன்கள் தேவைப்பட்ட போது உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.  ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகன் விருது 96 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

https://goo.gl/kH1VDR
adresponsive_1


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
adresponsive_4