குழந்தையின் வயிற்றுப்போக்கு

குழந்தையின் வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு காரணம் நீரிழப்பு நிலையை ஆகும்.


வயிற்றுப்போக்கு நோய் என்றால்என்ன?

திரவமாக அடிக்கடி மலம் கழிந்தால் அது வயிற்றுப்போக்கு ஆகும். சில நேரங்களில் பேதியுடன் இரத்தமும் கலந்து போகும். அது சீதபேதி எனப்படும். பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் போது மலம்  இளகலாக அடிக்கடி போகும் அது வயிற்றுப்போக்கு இல்லை.


வயிற்றுப்போக்கு நோய் எதனால் ஏற்படுகிறது.?

வயிற்றுப்போக்கு நோய் எற்படுவதற்குக் கிருமிகளே காரணம். வைரஸ் பாக்டீரியா முதலிய கிருமிகளால் வயிற்றுப்போக்கு நோய் ஏற்படுகிறது. குழந்தைகள் உண்ணும் உணவு பால் முதலியவை சுத்தமாக இல்லாவிட்டால் கிருமிகள் வாந்திபேதி நோயை ஏற்படுகிறது.

நீரிழப்பு நிலை என்றால் என்ன?

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நோய் ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச்சத்து வெளியேறுகிறது.இதனால் உடலில் நீரிழப்பு நிலை ஏற்படுகிறது . மேலும் சில தாய்மார்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நோய் இருக்கும் போது எந்த உணவையும் நீரையும் கொடுப்பதில்லை. இதனால் நீரிழப்பு நிலை மோசடைகிறது. இது தவிர குழந்தைக்கு வாந்தியும் சோந்து இருந்தால் நீரிழப்பு நிலை மோசடைகிறது. இதனால் குழந்தைக்கு மரணம் கூட சம்பவிக்கலாம்.

வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைக்கு எப்படி மருத்துவ உதவி அளிக்க வேண்டும்?


1. நீரிழந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.


2. இழந்த நீரை ஈடுசெய்ய வேண்டும்.


3. குழந்தைக்குச் சரியான முறையில் உணவு கொடுத்து ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் காக்க வேண்டும்.

நீரிழந்த நிலை ஏற்படாமல் வீட்டில் தடுக்கும் முறை குழந்தைக்கு

வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்ட உடன் நிறைய திரவ ஆகராம் கொடுக்க வேண்டும் .கஞ்சி இளநீர் டீ தாய்ப்பால் முதலியவற்றைக் கொடுப்பதன் முலம் நீரிழந்த நிலை ஏற்படமால் தடுக்க முடியும். ஒவ்வொரு முறையும் பேதி ஆகும்போது 50 முதல் 100 மி.லி வரை திரவ ஆகாரம் கொடுப்பதன் முலம் நீரிழப்பு நீலை வாரமல் தடுக்க முடியும்.


இழந்த நீரை ஈடு செய்ய உப்பு சா்க்கரை கரைத்த நீரைக் கொடுக்க வேண்டும். இதை வீட்டிலே செய்ய முடியும் .ஒரு தம்ளர் சுத்தமான நீரில் இரண்டு தேக்கரண்டி சாக்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். அல்லது ஒரல் ரீ ஹைட்ரேஷன் உப்புப் பொட்டலம் ஒன்றை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து குழந்தைக்கு நிதானமாக கொடுக்கவும். வாந்தி உள்ள குழந்தைக்குகூட இந்தக் கரைப்பான் நீரைக் கரண்டியில் மூலம் ஒவ்வொரு கரண்டியாகக் கொடுக்கலாம். ஒரல் ரீ ஹைட்ரேஷன் உப்பு எல்லா மருத்துவ மனைகளிலும், எல்லாக்கடைகளிலும் இப்போது கிடைக்கிறது. இவ்வாறு இந்தக் கரைசலை குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் நீரிழந்த நிலையைச் சரி செய்ய முடியும்.


இவ்வாறு வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமாகக் கொடுக்கும் எல்லா உணவுகளையும் கொடுக்கலாம். வகைகளைவிட அதிகமான உணவைக் குழந்தை வயிற்றுப்போக்கு நோயில் இருந்து தேறிவரும்போது கொடுத்தல் அவசியம்.


நிரிழந்த நிலையைக் கண்டுபிடிப்பது எப்படி?

ஆரம்பத்தில் குழந்தை அழதுக்கொண்டும் தாகம் அதிகமாகவும் இருக்கும். தோலின் மீள் சக்தி குறைந்து காணப்படும்.குழந்தை சீறுநீர் கழிப்பது குறைந்து விடும். கண்கள் குழிவிட்டும் வாய் நாக்கு உலாந்தும்,உச்சி குழியிட்டும் போய்விடும்.


நீரிழந்த நிலை அதிகமாகும் போது குழந்தை சோர்ந்து போய்விடும். கைகால் சில்விட்டு போய்விடும். நாடித்துடிப்பு குறைந்து காணப்படும் குழந்தைக்கு அறவே சீறுநீர் போகாது.

.இது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.


எப்போழது குழந்தையை மருத்தவமனைக்கு அழைத்துப் போக வேண்டும்.

குழந்தை 10-12 முறை திரவமாக பேதியும் வாந்தியும் செய்தால் .

குழந்தை சீறுநீர் கழிக்காமல் 8- 10 மணி நேரம் வரை இருந்தால் .

குழந்தை சோர்ந்து இருத்தல் ,குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டால்.

குழந்தை உப்பு சா்க்கரை நீரை குடிக்கமால் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால்


வயிற்றுவலி மற்றும் இரத்தப்போக்கு இருந்தால் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்தப் போக வேண்டும்.ORTஎன்றால் என்ன?


வாந்திபேதியினால் நீரிழந்த நிலை ஏற்படமால் தடுப்பதற்காக கொடுக்கப்படும் மருத்தவ முறைக்கு ORAL REHYDRATION THERAPY என்று பெயர்.


இதில்

சோடியம் குளோரைடு        35gms

சோடா  பைகார்பபொ னெட்    2.5gms
பொட்டாசியம் குளோரைடு        1.5gms
குளுக்கோஸ்                20 gms

சுத்தமான நீர்                1லிட்டர்

இந்தநீரைக் கரண்டியின் முலம் குழந்தைக்கு நிதானமாக கொடுப்பதன் மூலம் நீரிழந்த நிலையைத் தடுக்க முடியும்..

வயிற்றுப்போக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி .


சுத்தமான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வயிற்றுப்போக்கு நோய் வாரமல் தடுக்க முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே முதல் நான்கு மாதம் வரை கொடுக்கவேண்டும்.

நான்கு மாதத்திற்குப் பிறகு இணை உணைவை சுத்தமான மறையில் கொடுக்க வேண்டும் .உணவு சமைப்பதற்கு முன் சுத்தமாகக் கையைச் சோப்புப்போட்டு கழுவ வேண்டும். சமைத்த உணவைச் சுத்தமான பாத்திரத்தில் எப்பொழுதும் மூடி வைக்க வேண்டும்.


பாட்டில் உறிஞசும் தம்ளர் முதலியவற்றின் மூலம் குழந்தைக்கு பால் கொடுக்கக்கூடாது. அதற்குப் பதில் பாலாடை பயன்படுத்தலாம்.


குழந்தை வயிற்றுப்போக்கு நோயில் இருந்து மீண்டபிறகு வழக்கமாகக் கொடுக்கும் உணவுடன் சிறிது அதிகமான உணவைக் கொடுப்பதன் முலம் இழந்த எடையை ஈடுசெய்ய முடியும். தாய்ப்பால் வயிற்றுப்போக்கினைத் தடுக்கமுடியம்.


https://goo.gl/j5PTVX
adresponsive_1


குழந்தையின் வயிற்றுப்போக்கு
14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

குழந்தையின் வயிற்றுப்போக்கு
29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

குழந்தையின் வயிற்றுப்போக்கு
26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

குழந்தையின் வயிற்றுப்போக்கு
24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

குழந்தையின் வயிற்றுப்போக்கு
24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு
adresponsive_4