குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு

அதிலும் குறிப்பாக,சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.
* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.
* தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம்.
* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.
* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான நீரில் குளிப் பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
* குளிர்காலத்தில் பெரும்பாலானவர் களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.
அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர வறண்ட சருமம் மின்னுவதை காணலாம்.
வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு எளிமையானதை உபயோகித்து வறண்ட சருமத்தை போக்கி பளபளக்கும் மேனியை பெறுங்கள்.
Related :
சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்
தேவையான பொருள்கள்அரிசி மாவு - அரை கப் பச்சை பயறு மாவு - அரை கப் கடலைமாவு - அரை கப் ஓட்ஸ் பவுடர் - அரை ...
உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்
குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...
கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka
1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
எலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...
பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
தக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...
குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga
குதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...
முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka
முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...
மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...
வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...