பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து விளையாடியது.தென் ஆப்பிரிக்கா முதலில் திணறியது.தென்னாப்பிரிக்கா 30.3-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது.. டிவில்லியர்ஸ் இறங்கியதும், விளையாட்டு விறுவிறுப்பை எட்டியது. பந்துவீச்சில் அச்சுறுத்திய நியூசிலாந்தை டிவில்லியர்ஸ் அடித்து ஆடினார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் எடுத்து இருந்தது. மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது. மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 குறைக்கப்பட்டது.


தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் அதிரடி காட்டினார். டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரம் காட்டியதால் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எட்டியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 43 ஓவர்களுக்கு 298 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மாற்றப்பட்ட விதிமுறைப்படி 3 பவுலர்கள் அதிகபட்சமாக 9 ஓவர்களும், 2 பவுலர்கள் அதிகபட்சமாக 8 ஓவர்களும் வீச முடியும். நியூசிலாந்துக்கு கட்டாய பேட்டிங் பவர் பிளே 9 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப பேட்டிங் பவர்பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

 இதையடுத்து பேட் செய்ய வந்த நியூசிலாந்தின் தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடினார். ஸ்டெயின், மோர்க்கல் போன்ற உலகத் தரம் வாய்ந்த பவுலர்களும் அவரது அதிரடி தாக்குதலில் தப்பவில்லை. ஸ்டெயின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் கப்தில் சிங்கிள் எடுக்க, 2வது பந்தை சந்தித்தார்


மெக்கல்லம். அந்த பந்து நடு ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி, அவுட் ஸ்விங் ஆனது. அதை பேக்புட் சென்று தடுத்தார் மெக்கல்லம். அப்போது அவரது இடது காலி்ல் மாட்டியிருந்த ஷூ தனியாக கழன்று ஓடியது.இதுமிகவும் அரிதான சம்பவமாகும். இப்படித்தான், நடப்பு உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே பேட் உடைந்ததும் சுவாரசியமாக பேசப்பட்டது.

மெக்கல்லம் ஷூ ஏன் தனியாக கழன்று ஓடியது என்று ரசிகர் ஒருவர் கூறிய கமெண்ட்தான் டாப். சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் இரண்டாவது பேட்டிங் தொடங்கியதால், அவசரத்தில் ஷூ லேஸ் கட்ட மறந்து வந்துவிட்டார் போலும் என்றார் அந்த ரசிகர். ஷூவை கழற்றி போட்டு சுழன்று, சுழன்று அடித்த மெக்கல்லம், 26 பந்துகளில், 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

6.1வது ஓவரில் 71 ரன்கள் குவித்த நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை அப்போது பறிகொடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆதிக்கம் ஆரம்பித்தது. 8.5வது ஓவரில் மோர்கல் பந்தில் கேன் வில்லியம்சன் கிளீன் பௌல்ட் ஆகி வெளியேறினார். எனவே கப்திலும், டைலரும் பொறுமையாக ஆட தொடங்கினர்.


 ஆனாலும் ரன் ரேட்டை குறையவிடவில்லை. ரோஸ் டைலர் 30 ரன்னிலும், கப்தில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், கிரான்ட் எலியட் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து அணியை மீட்டது.


கடைசிகட்டத்தில் 58 ரன்களில் ஆன்டர்சன் அவுட் ஆன நிலையில், அதை தொடர்ந்து களமிறங்கிய லூக் ரோன்ச்சியும் 8 ரன்களில் நடையை கட்டினார்.

32வது ஓவரில் 204 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது, அதிரடி வீரர் ஆன்டர்சன் மற்றும் எலியட் ஆடிக் கொண்டிருந்தனர். ஸ்டெயின் பந்து வீச்சில் எலியட் ஆப் சைடில் தட்டி விட்டார். அதற்குள் பாதி பிட்ச் ஓடிவிட்டார் ஆன்டர்சன்.

 எனவே பந்து வீச்சாளர் முனையிலுள்ள ஸ்டம்பில் பந்தை எறிந்தால் ஆன்டர்சனை ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பின் அருகே ஓடிவந்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ். பந்து அவரது கையில் சிக்கியபோது, ஆன்டர்சன் வெகு தொலைவில் நின்றார். ஆனால், பந்து வேகமாக வந்ததால், டி வில்லியர்ஸ் கையில் இருந்து பந்து நழுவியது.

வெறும் கையிலேயே ஸ்டம்பை அடித்துவிட்டார் டி வில்லியர்ஸ். ஆனால், அதன்பிறகு, குஷ்டியடித்து பந்தை பிடித்து மீண்டும் ஸ்டம்பில் அடித்தார்.


அப்போதும், ஆன்டர்சன் கிரீசை வந்து அடையவில்லை. இருப்பினும், இது 3வது நடுவர் ரிவியூவ்வுக்கு போனது. வெறும் கையால் ஸ்டம்பை அடித்தபோது, பெய்ல்ஸ் கீழே விழுந்துவிட்டதால், மீண்டும் பந்தை பிடித்து அடித்தது செல்லாது என்பது நடுவர் தீர்பாகியது. ஆன்டர்சன்தப்பினார்.


அவர் அப்போது 33 ரன்களுடன் இருந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் கிடைத்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா வீண் செய்துவிட்டது. மறுமுனையில் எலியட் சளைக்காமல் ஆடினார்.

கடைசி ஓவரில் (43வது ஓவர் ), நியூசிலாந்து வெற்றிக்கு 12 ரன்கள் தேவை, இறுதி போட்டிக்குள் செல்ல 11 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை ஸ்டெய்ன் வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்தில் எலியட் சிக்சர் அடித்து வெற்றியை தட்டிப் பறித்தார்.

7வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குள் வந்த நியூசிலாந்து முதல் முறையாக இறுதி போட்டிக்குள்  நுழைந்துள்ளது.

 தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பை சோகம் தொடருகிறது. நெருக்கடியான நேரத்தில் ஆட வந்து 84 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்ற நியூசிலாந்தின் எலியட்டுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

நெருக்கடியான நேரத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் நடுக்கமடைந்து கோட்டை விடுவார்கள் என்ற உதாரணத்தை இன்றைய போட்டியிலும் வீரர்கள் நிரூபித்தனர். முக்கிய தருணங்களில் கேட்சை விட்டனர், எளிதான ரன் அவுட் சான்சுகள் ஏகப்பட்டதை கோட்டை விட்டனர்.
adresponsive_1


பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
adresponsive_4