பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
தக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

பன்னீரும் தேனும் ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.

 உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணெணை தடவலாம். ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும்.
 ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூசலாம்

காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.

 எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.

 வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.

வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து அரைத்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும்.

 தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய்  இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும்.

adresponsive_1

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
04 Apr 2021

தலை முடி கொட்டாமல் நன்கு வளர செம்பருத்தி எண்ணெய்|sembaruthi hair oil benefits in tamil

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
23 Mar 2021

முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
13 Feb 2021

முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | Kuthikal Vedippu Neenga
adresponsive_4